500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

500 நகர்ப்புற நலவாய்ப்பு சுகாதார மையங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதற்காக சட்டப்பேரவையில் விதி 110 படி 708 நகர்ப்புற நலவாய்ப்பு மையங்கள் 2021 இருந்து 2023 வரை கட்டப்பட்டு வருகின்றன.    தற்போதுஅவற்றில் 500 மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்படியே தியாகராய நகரில் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக திறந்து வைக்கிறார். சென்னை ,கோவை ,திருச்சி ,சேலம் என பல இடங்களில் 499 நகர்ப்புற நலவாய்ப்பு மையங்களை காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார். இதில் , மருத்துவர் செவிலியர் ,சுகாதார ஆய்வாளர் மற்றும் துணை பணியாளர் ஆகியோர் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியமர்த்தப்படுவர்.

இந்த சுகாதார நிலையங்கள்  காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் . இங்கு கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, புற நோயாளிகள் பிரிவு, முதியோர்களுக்கான நோய் தடுப்பு சேவை , மற்றும் விபத்து குறித்து  முதலுதவி சிகிச்சை  என அவசர கால சேவை உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில்  மருத்துவத்துறை வரலாற்றில்  முதன்முறையாக ஒரே நாளில்     (ஜூன் 6)     500 சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகின்றன!

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…