50 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்!

50 ஆவது ஜி.எஸ்.டி  கவுன்சில் கூட்டம்!

50 ஆவது ஜி.எஸ்.டி  கவுன்சில் கூட்டம். ஜூலை 11ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த  ஜி.எஸ்.டி கவுன்சிலிங் கூட்டம் டெல்லியிலுள்ள  விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 தேதி சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது. கடைசியாக இந்த வருடம் 2023 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி 49ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  ஜூலை 11. இல் நடைபெறும் 50ஆவது ஜி.எஸ்.டி கவுன்சிலின் சிமெண்ட்டுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி  குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மேலும் வர்த்தகம், ஆன்லைன் விளையாட்டு மீதான வரி விதிப்பு பற்றியும் ஆலோசனை  மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.  சரக்கு மீதான சேவை வரி, மற்றும் பயன்பாட்டு வாகனங்களுக்காக ஜி.எஸ்.டியை மறு ஆய்வு  செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஐம்பதாவது கவுன்சிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

Related post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன்…

 டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர்…
9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…

நாடாளுமன்றத்தில் 2024-25 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடரை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கம்…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்தில்…