37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி (தென்னாப்பிரிக்கா – இந்தியா) இடையே நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய வீரர்களான ரோகித் சர்மா ,விராட் கோலி, ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் நன்றாக விளையாடினர்.இறுதியாக 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் பெற்றது.இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 ஆவது சதத்தைக் எடுத்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த மாஸ்டர் என்ற பெயர் பெற்றார். இதனால் விராட் கோலிக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்ததாக களம்மிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் அணி ஆட்ட தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பைத் தவறவிட்டது. இந்த அணியில் வீரர்களான டிகாக், பவுமா, மார்க்ரம், கிளாசன், வான்டர் டுசன், மில்லர், கேஷவ் மகாராஜ், யான்சன், ரபாடா, இங்கிடி ஆகியோர் அடுத்தடுத்தாக ஆட்டமிழந்தனர். 27.1 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 243 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Related post

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது .இந்தப் போட்டியில் (தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள்) மோதின. ரோகித் சர்மா தலைமையில் இந்திய…
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார…

தென் கொரியாவில் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் குரூப் 1 குரூப் 2 குரூப் 3 எனப் பிரிவுகளில்…