பாரிஸ் நாட்டில் 33 ஆவது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். முன்னதாக மகளிர் பிரிண்டர்ஸ் 50 கிலோ எடைப்பிரிவில் உலகில் முதல் நிலை ஜப்பான் வீராங்கனையை(2-3) வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். 
அதன் பிறகு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் உக்ரைன் வீராங்கனை (7-5) என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். போட்டியில் மல்யுத்த இந்திய வீராங்கனை தினேஷ் போகத் அபார வெற்றி கொண்டு அசத்தல் புரிந்து வருகிறார்.
