ஐ.பி.எல் 36 ஆவது போட்டி பெங்களூர் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் கொல்கத்தா அணியின் ஜெய்சன் ராய் மற்றும் ஜெகதீஷசன் இணைந்து பேட்டிங் தொடங்கினர். இவ்விருவரும் தொடக்கத்தில் 83 ரன்கள் எடுத்து ஒருவர் பின்பு ஒருவராக ஆட்டமிழந்தனர். அதற்குப் பிறகு வந்த நிதிஷ் ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 31ரன்கள் குவித்து விக்கெட்டி னை எடுத்தனர். ஆண்ட்ரே ரஸில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஆவது ஓவரில் வந்த ரிங் சிங் மற்றும் டேவிட் விசா சுமாராக விளையாடி 37 ரன்கள் மொத்தம் 200 ரன்கள் குவித்தது.
இலக்கினை நோக்கி இரண்டாவதாக ஆடிய பெங்களூர் அணியில் பாப் டூ பிளெசிஸ் 17 ரன்களை எடுத்து முதலிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்களிலும், கீளென் மேக்ஸ் வெல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து மகஹிபால் லோம்ரார் விராட் கோலியுடன் இணைந்து விளையாடி 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 54 ரன்கள் எடுத்து விக்கெட்டுக்குள்ளானார். 20 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து மொத்தம் 179 ரன்களை குவித்தது. இறுதியாக கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!