21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிவெற்றி!

21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிவெற்றி!

ஐ.பி.எல் 36 ஆவது போட்டி பெங்களூர் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் கொல்கத்தா அணியின் ஜெய்சன் ராய் மற்றும் ஜெகதீஷசன் இணைந்து பேட்டிங் தொடங்கினர். இவ்விருவரும் தொடக்கத்தில் 83 ரன்கள் எடுத்து ஒருவர் பின்பு  ஒருவராக ஆட்டமிழந்தனர். அதற்குப் பிறகு வந்த நிதிஷ் ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் ஐயர்  31ரன்கள் குவித்து விக்கெட்டி னை எடுத்தனர். ஆண்ட்ரே ரஸில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஆவது  ஓவரில் வந்த ரிங் சிங் மற்றும் டேவிட் விசா சுமாராக விளையாடி 37 ரன்கள் மொத்தம்  200 ரன்கள் குவித்தது.

இலக்கினை நோக்கி இரண்டாவதாக ஆடிய பெங்களூர் அணியில் பாப் டூ பிளெசிஸ் 17 ரன்களை எடுத்து முதலிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாபாஸ் அகமது    2 ரன்களிலும், கீளென் மேக்ஸ் வெல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து மகஹிபால் லோம்ரார் விராட் கோலியுடன் இணைந்து விளையாடி 34 ரன்கள்  எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 54 ரன்கள் எடுத்து விக்கெட்டுக்குள்ளானார். 20 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து மொத்தம் 179 ரன்களை குவித்தது. இறுதியாக கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

 

Related post

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…
ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் தொடரான 16 ஆவது சீசனில் 54ஆவது போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் (மே 9)மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இடையான போட்டி நடைபெற்றது.…