2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா, 250 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரோஹப் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.மேலும் 28 ஏவியோனிக் நிறுவனங்கள் இந்த வளாகத்தில் அமையும்.இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு TIDEL Park Ltd நிறுவனம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related post