இந்தியாவில் அனைத்து கார்களிலும் பின் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம் பெற வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும்,கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குப் பின் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்றும், விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை 2025 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
