2023 மிஸ் இந்தியா – நந்தினி குப்தா!

2023 மிஸ் இந்தியா – நந்தினி குப்தா!

2023 மிஸ் இந்தியா – நந்தினி குப்தா! மிஸ் இந்தியா 2023 அழகி பட்டத்தை நந்தினி குப்தா ஃபெமினா வென்றுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற 59 ஆவது மிஸ் இந்தியா போட்டியில்  ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயதான இவர்  பட்டத்தைப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த இவர் போட்டியில் வெற்றி பெறுவது  தனது சிறுவயது கனவாக இருந்தது.  தான் 10 வயதிலிருந்தே மிஸ் இந்தியா ஆக விரும்பி தனது கனவை அவர் தற்போது நனவாக்கியுள்ளார் . லாலா லஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார்.

பிப்ரவரி 11ஆம் தேதி மிஸ் ராஜஸ்தானாக நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு சிறிய நகர பெண்ணாக அவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார். 2024 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டிக்கு ஃபெமினா தன்னை தயார்படுத்தியும் வருகிறார். உலக அழகி போட்டியில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் . 2024 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 71 ஆவது உலக அழகி போட்டியில் நந்தினி நிச்சயம் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். நந்தினி குப்தா ஃபெமினா மிஸ் இந்தியாவுக்கு ராஜஸ்தானின் முதல்வர்  உட்பட நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் நந்தினிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Related post