2000 ரூபாய் மாற்ற கால நீட்டிப்பு கிடையாது மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிவிப்பு!

2000 ரூபாய் மாற்ற கால நீட்டிப்பு கிடையாது மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிவிப்பு!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்காக செப்டம்பர் 30 வரை ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது. மேலும் இதற்கான கால நீட்டிப்பு கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றம் செய்யலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும் செப்டம்பர் 30 தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்.பி‌.ஐ அறிவுறுத்தியது. இதனால் கடந்த மாதம் (ஜூன்30 )புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கான மொத்த மதிப்பு 2.72 லட்சம் கோடி ரூபாய் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 87 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 சதவீதம் வேறு மதிப்புள்ள நோட்டுக்களாக மாற்றப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கான கால நீட்டிப்பதனைக் குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கான அறிவிப்பில் “மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி செப்டம்பர் 30 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் இதற்கான கால நீட்டிப்பு கிடையாது” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related post

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர்…

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம்…
வருமான வரி  செலுத்த தவறினால் அபராதம்!

வருமான வரி செலுத்த தவறினால் அபராதம்!

வருமான வரி  செலுத்த தவறினால் அபராதம்!   வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது. (2023) நிதி ஆண்டுக்கான…