13ஆவது உலகக் கோப்பை தொடரின் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பெயரை ஐ சி சி அறிவித்துள்ளது!

13ஆவது உலகக் கோப்பை தொடரின் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பெயரை ஐ சி சி  அறிவித்துள்ளது!

கடந்த ஒன்றரை மாதமாக13ஆ வது உலககோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 13 ஆவது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் (இந்தியா- ஆஸ்திரேலியா) இடையே நடைபெற்றது. இதில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்திய பிரதமர், தமிழக முதல்வர், பல்வேறு தரப்பினர்கள் ஆறுதல்களைத் தெரிவித்து இந்தியாவிற்கு எப்போதும் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உலகக் கோப்பைத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய 11வீரர்களின் கனவு அணியின் பெயர்களை ஐ சி சி அறிவித்துள்ளது.

ஐசிசி கனவு அணியில் முதல்வதாக இந்திய கேப்டன் அணியின் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி ,கே எல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது, ஷமி போன்றோர்களும் இடம் பிடித்துள்ளனர்.ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்கா குயிண்டன் டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூசிலாந்து டேரில் மிட்செல், இலங்கை தில்ஷன் மதுஷங்க ஆகியோரின் பெயரும், உலகக் கோப்பை கனவு அணியில் இடம் பிடித்துள்ளனர். எனவே 11 கிரிக்கெட் வீரர்களுக்கும் ஐசிசி கிரிக்கெட் வாரியம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

Related post

மெட்ரோ ரயில்  பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மெட்ரோ ரயில் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் தொடரில் பல்வேறு நாடுகள் பங்கேற்கிறது.. இந்நிலையில் வருகிற அக்டோபர் 23ஆம்…
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடம்!

உலக  கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடத்தை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. எனவே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான…