12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

12 மணி நேர வேலை  மசோதா நிறுத்திவைப்பு  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை என்ற சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார்.தொழிலாளர் நலத் துறை சார்பாக கடந்த 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில்.தொழிற்சாலையில்தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை என மசோதா  கொண்டு வரப்பட்டநிலையில் தி.மு.க வில் உள்ள கூட்டணி கட்சிகளே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 நேரம் மணி நேரமாக உயர்த்துவது குறித்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது 12 மணி நேர வேலை தனியார் நிறுவனங்களில் நான்கு நாட்கள் 12 மணி நேரம் செய்து விட்டு மூன்று நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகும் இது ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரம் ஆக இருக்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது இருப்பினும் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி திமுக கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் மு.க.ஸ்டாலின் அவர்கள்  12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பினை வெளியிட்டார்..

 

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…