தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச் 1) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,302 மையங்களில் 7.94 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு இன்று பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச்1-ஆம் தேதி இன்றைய தினம் முதல் மார்ச் 22 ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘மாணவர்களுக்கு தேர்வு என்பது ஒரு நடைமுறையே தவிர பதற்றம் வேண்டாம் !மாணவர்கள் நன்றாக தேர்வினை எழுதவும் என்று தமிழக முதலமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.