11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

11-ஆம் வகுப்பு தேர்வுகளில் கோவை மாவட்டம் முதலிடம்!

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இந் நிலையில் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணியளவில் வெளியிடப்பட்டது.

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அரசு தேர்வு துறை இயக்குநர் சேதுராமன் வர்மா செய்தியாளர்களுடன் வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் 9 1.17 % மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இதில் கோவை மாவட்டம். 96.02 %. தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.56 % பெற்று, இரண்டாவது இடத்தையும் திருப்பூர் மாவட்டம் 95 . 23 % மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சென்னை மாவட்டம் 91.68 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் 17- ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்று அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.

Related post

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

 கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு…
கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…
கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவையில் பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை- காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை துணை ஆணையர் சண்முகம் தலைமையில்…