10ஆவது ப்ரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு அணி வெற்றி!

10ஆவது ப்ரோ கபடி லீக்  தொடரில் பெங்களூரு அணி வெற்றி!

இந்தியாவில் பத்தாவது ப்ரோ கபடி லீக் தொடர் (ஜனவரி 2ஆம் 2024) தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தக்‌ கபடி போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

மும்பையில் நேற்றைய தினம் (பெங்களூர் புல்ஸ் -பாட்னா பைரேட்ஸ்) ஆகிய அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது .இந்தப் போட்டியில் பெங்களூரு அணியானது 35- 33 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் வீழ்த்தியது. இதனால் பெங்களூர் அணியானது 7-ஆம் இடத்திற்கு முன்னேறி வெற்றி பெற்றுள்ளது.

Related post