தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 94.56 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந் நிலையில் 2024- 2025 ஆண்டிற்கான வேளாண் பட்டப்படிப்புகளுக்குச் சேர விரும்புவர்கள் நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் . தமிழகத்தில் வேளாண்மை இளமறிவியல், பட்டய படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்லைன் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் மாணவ மாணவியர்கள் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார் .