இலவச பேருந்து துவக்க விழா வேல்ஸ் மருத்துவமனை. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சங்கரணை பகுதியில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை சேர்ந்த பல்வேறு கிராமங்களிலிருந்து பொது நோயாளிகள் ‘வேல்ஸ்’ மருத்துவமனைக்கு வருகின்றனர். பொது மக்கள், பிற நோயாளிகளின் நலனுக்காக பேருந்து ஒன்றை இயக்க வேல்ஸ் மருத்துவமனையின் இலவச பேருந்து விழா ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் திரு.அப்துல் ரஷீத், தலைமையில் கொடி அசைத்து துவக்கப்பட்டது.

இந்த விழாவில் திருமதி.அபிராமி குமரவேல்,வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை C E O ஹரி கிருஷ்ணன் , ஏசியன்ட் Dr.சதீஷ் தேவ், C1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகேசன், அரசு அதிகாரிகள், மேலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர். நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மஞ்சங்கரணை வரை தினமும் காலை 8. 40 மணிக்கு வேல்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்லும் வகையில் இலவச பேருந்து வசதி இயக்கப்பட உள்ளது.
