கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு நாடுகளில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவோ வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றன. FedEx மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் இணைய நடவடிக்கை அதிகமாக காணப்படுகிறது.
இதுபோன்ற வெளிநாட்டுகளில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லும் ஆன்லைனில் வரும் வதந்திகளை இளைஞர்கள் நம்ப வேண்டாம் என்றும், ஏதேனும் விளம்பரங்கள் வந்தால் அதன் உண்மை தன்மையைச் சரி பார்க்க உள்ளூர் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை அதிகாரி காவல்துறை தலைமை அதிகாரி டிஜிபி சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்துள்ளார்.