“2023-2024 ஆம் ஆண்டுகளில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் அரசு தனியார் பங்களிப்புடன் 5,000 மெகா வாட் காற்றாலையை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என்றார். 72 புதிய துணை மின் நிலையங்களும் தொடங்கப்படும், . தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செல்லும் மேல்நிலை மின்கம்பிகள் புதைவிடங்களாக மாற்றப்படும்” என அறிவித்தார்.. மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளைக் கண்டறிவதற்கு ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும். கரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய மின்னியக்கங்கள் உருவாக்கப்படும். நெல்லை, ஸ்ரீரங்கம் கோயம்புத்தூர் , திருப்பரங்குன்றம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின்கம்பிகளைப் புதைவிடங்களாக மாற்றி அமைக்கப்படும் ,என 31 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எரிசக்தி துறையின் கீழ் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.