சென்னை தலைமை செயலகத்தில் மகளிர் தினமான நேற்றைய தினத்தில் மூத்த பத்திரிகையாளரான வி என் சாமி அவர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருதினைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார் .மேலும் சிறந்த எழுத்தாளர்களான 10 தமிழர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் 10 குடியிருப்புகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து காணொளி வாயிலாக பல நல திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச் பி வி தடுப்பூசி திட்டத்தினைத் தொடங்கி வைத்தார் .இந்தத் தடுப்பூசியானது 9 முதல் 14 வரை உள்ள பெண் குழந்தைகளுக்குப் போடப்படும். மேலும் சோழிங்கநல்லூரில் உள்ள நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சேவைகளைந் தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.