விளம்பரப்பலகை , பேனர்கள் வைப்பவர் மீது தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை கடும் எச்சரிக்கை! அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பவர் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000 அபராதம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவையில் விளம்பரப்பலகை விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாக பேனர் வெளியிடுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரபலதொழில் நிறுவனங்கள், நிலகட்டமைப்பு நிறுவனங்கள், மற்றும் தனிநபர் உரிமம் பெறுவதன் மூலமாக பேனர்கள், விளம்பரப்பலகைகள் வைக்க முடியும். மேலும்உரிமம் காலம்க் முடிந்ததும் உடனடியாக அகற்ற வேண்டும்.
இந்த ராட்சத விளம்பர பேனர்களால்விபத்து நேரிட்டால் விளம்பரப் பலகைகள் , பேனர்கள் வைப்பவர் மீது சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விளம்பரப் பலகைகளால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு , காயங்களோ ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு விளம்பர பலகை வைக்கும் நிறுவனம் ,நிலக்கட்டமைப்பு , மற்றும் தனிநபர் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் உரிமம் பெறாமல் விதிகளை மீறி விளம்பர பலகைகள் ,பேனர்கள் வைப்பவர்கள் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ரூ25,000 அபராதம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது!