வந்தே பாரத் ரயில் கட்டணம் 10 சதவீதம் குறைவு. வந்தே பாரத் ரயில் கட்டணம் 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் பல நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் வந்தே பாரத் ரயில் சேவை (டெல்லி – வாரணாசி) இடையே தொடங்கப்பட்டது. தற்போது 24 மாநிலங்களில் மொத்தம் 46 வந்தே பாரத் ரயில் சேவைகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் வந்தே பாரத் ரயில் சேவையின் பல வழித்தடங்களில் பயணம் செய்பவரின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. எனவே மத்திய ரயில்வே அமைச்சரானது ஆய்வினை மேற்கொண்ட போது வந்தே பார்த் ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் கட்டண வசூலை 10 சதவீதம் குறைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் (சென்னை – மைசூர்) (சென்னை- கோயம்புத்தூர்) இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. தற்போது (சென்னை – திருப்பதி) இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 7ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடியால் தொடங்கப்படவுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்குள் (400 வந்தே பாரத்)ரயில் சேவைகள் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.