தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இனி கண் கருவிழி சரிபார்ப்பு கருவி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து ( பயோ மெட்ரிக்) உடன்,கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களைப்பெற திட்டம் மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 36ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஒயாசிஸ் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் , ரேஷன் கடைகளில் கண் கருவிழி சரிபார்ப்பு திட்டம் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.