ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலகாலமாக கொண்டாடப்படுகிறது.மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி மகாசிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே இக்கோயிலில் மார்ச் 1ஆம் தேதி முதலே கோயிலில் மாசி மாத மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலில் காலை, மாலை வேலைகளில் சுவாமி- அம்பாளுக்குத் தீபாராதனைகள் திருவீதி உலா நடைபெறும்

மார்ச்-8 ஆம் தேதி மகா சிவராத்திரி இரவு அன்று வெள்ளிரத தேரோட்டமும், மறுநாள் திருத்தேரோட்டமும் நடைபெறும். மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வணங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து விடிய விடிய கண்விழித்து வழிபடுவர்.

Related post

கோவையில்  மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழா PVR தியேட்டர்களில் ஒளிபரப்பு!

கோவையில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழா PVR…

கோவை மாவட்டத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பதற்காக முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன‌.…