ராமேஸ்வரம் மாவட்டம் ராமநாதசாமி கோயிலில் ஆனி மாத அமாவாசையான இன்று பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்தனர். ராமநாத கோயிலில் திருக்கோயிலில் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடி பிறகு மறைந்த முன்னோர்களுக்குத் திதி ,தர்ப்பணம் கொடுத்தனர். பிறகு பசு மாட்டிற்குப் பழங்கள், கீரை வகைகளைக் கொடுத்து வழிபட்டனர்.
ஆனி மாத அமாவாசை என்பதால் ராமநாத கோயிலில் போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் காணப்பட்டதால் 300 போலீசார் பாதுகாப்புக்குப் போடப்பட்டது. அதேபோல் சதுரகிரி மலைக் கோயிலிலும் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.