ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு!

ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு!

ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரஜினிகாந்தின் தற்போது ‘ஜெயிலர்’படத்தில் கதாநாயகனாகவும், ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.  லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் வெளிவர இருக்கிறது.அடுத்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில்  ரஜினியின்   இரண்டு படங்களின்  ஸ்டைலான போட்டோ அப்டேட்ஸ் வெளியாகி வருகிறது.இதை மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்படத்தின் ‘முன்னோட்ட டிரெய்லர்’ வீடியோஒன்று வெளியானது. மேலும் ‘லால் சலாம்’ படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஸ்டைலான தோற்றத்தில் ‘லால் சலாம் ‘படத்தின் அறிமுக போட்டோ இன்று       (மே 8 ) தேதி இரவு நள்ளிரவில் வெளியானது. ஜெயிலர், லால் சலாம் என இரண்டு  போஸ்டர்களிலும் ரஜினிகாந்த் வயதான தோற்றத்திலும்  இருந்தாலும் அவரது ஸ்டைலே தனித்துவமாக காட்டப்பட்டு உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

Related post

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன்,…
‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…