யூடியூப் வலைத்தளங்களுக்கு டெலிகிராமில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் சிறார் துன்புறுதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று IT மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் ,குற்றவியல் செயல்கள், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை வலைத்தளங்களில் உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி தவறவிட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79 கீழ் அந்த தளங்களுக்கான பாதுகாப்பு உடனடியாக திரும்பப் பெறப்படும் .பிறகு இந்த வலைத்தளங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்! என மத்திய அரசு தெரிவித்துள்ளது.