தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த மாநாடு ஆகஸ்ட் மாதம் 24 ,25 தேதிகளில் நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்றைய தினம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த மாநாட்டில் வெளிநாட்டிலிருந்தும், இந்தியா முழுவதும் ஆன்மீக பக்தர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கான இந்த மாநாட்டிற்கான ஆன்மீக பக்தர்கள் பங்கேற்பு வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.