முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம்.தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூபாய் 20,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1996 ஆண்டு ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் முதலாவது தொழிற்சாலை முதலமைச்சர் கலைஞரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 27 ஆண்டுகளில் தமிழகத்தில் முதலீடு செய்ததில் 23 ஆயிரத்து 900 கோடியாக உயர்ந்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 20000 கோடி ரூபாய் முதலீட்டில் அதன் தொழிற்சாலைகள் நவீனப்படுத்தவும், நவீன வகையான கார்களை உருவாக்கவும், மின் வாகன மின்கலன் தொகுப்பு, மின் வாகன முன்னேற்ற நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு தமிழக அரசு வழிகாட்டி நிறுவனம் -ஹூண்டாய் மோட்டார் இந்திய லிமிடெட் நிறுவனமும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் படி தமிழக வழிகாட்டி நிறுவன இயக்குனர் விஷ்ணு, ஹூண்டாய் நிறுவன தலைமை செயல் அதிகாரி அன்சுகிம் ஆகிய இருவரும் இணைந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் முதலீட்டைக் கொண்டு தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகஅரசு வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்த உள்ளது.