மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த விலக்கு. தமிழக அரசானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக பல நல்வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த விலக்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் வேறு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. எனினும் மீறி வசூலிக்கப்பட்டால் தமிழக அரசால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.