மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை. ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி அருகே திருப்பதி செல்லும் சாலையோரங்களில் குப்பை கொட்டப்பட்டு மலைபோல தேங்கியுள்ளன. ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 2500 குடியிருப்புகளும், 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும், அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளில் 20,000 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியிலிருந்து அகற்றப்படும் குப்பைகளைஅரசுதூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் பெரியபாளையம் ஆரணி மாநில நெடுஞ்சாலையில் உள்ள திடக்கழி மேலாண்மை திட்டம் அமைந்துள்ள இடத்தில் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு கொட்டும் குப்பையை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆரணி பகுதியில் துர்நாற்றமும் ,சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர் , மேலும் அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன. இந்த நிலையில் ஆரணி பேரூராட்சி நிர்வாகத்திடம் “பொதுமக்கள் குப்பைகளை அகற்றும் படி கோரிக்கைகளை எழுப்பி “வருகின்றனர்!