மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை பகுதிகளில் (9 .7.2023) அன்று ( IND -TN -10 – MM-627 ) மற்றும் (IND -TN -10-MM-913 ) என்ற படகுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தமிழக மீனவர் குடும்பங்களிடையே மன உளைச்சலும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இதற்கான தீர்வை காண்பதற்காக தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசானது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இலங்கை கடற்படையால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக தீர்வு காண்பதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.