மகாத்மா காந்திஜி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2005 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது . இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் வேலையில்லா பொதுமக்கள் 100 நாள் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. தற்போது இந்த வருடம் 2023 வரை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊரக வேலை திட்டத்தில் சம்பளமும் உயர்த்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் , பருவமழை காரணமாகவும் பொது மக்களின் நலனுக்காக தொழிலாளர்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 2697 கோடியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் -சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.