மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை ஜூலை 28 நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சட்டப் பேரவையில் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்பட்டதன் பாதிப்பின் காரணமாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன .
இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினார்கள் பல கிராமங்களில் பள்ளிக்கூட அருகாமைகளில் போதை பொருட்கள் விற்கப்படுகின்றன .இந்நிலையில் போதை பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் “போதை பொருள் விற்பனை செய்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்க தண்டனைகள் கடுமையாக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்படும்” என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.