மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அத்துறையின் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். டெல்லியில் நேற்று (ஜூன் 28) 42ஆவது பிரதி கலந்துரையாடல் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தப் பிரதி கூட்டக்கலந்துரையாடலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் மருத்துவமனை சார்பாக மற்றும் ரயில்வே போக்குவரத்து சார்பாகவும் மாநிலங்களில் திட்டங்கள் குறித்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் தமிழ்நாட்டில் 10 மாநிலங்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு மதுரை,ராஜ்கோட் ,ஜம்மு உள்பட ஏழு இடங்களில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையைக் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்கும் படி கட்டுமான துறையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.