தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் நீர்வீழ்ச்சி, அருவிகள் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந் நிலையில் நெல்லை மாவட்டம் அம்மாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருகில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 மாதத்தில் பெய்த கன மழை காரணமாக மணிமுத்தாறு முழுவதும் சேதம் அடைந்து தண்ணீர் முழுவதும் நிரம்பி இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு மாதங்கள் பிறகு மணி முத்தாற்றில் பொதுமக்களுக்கு அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 26.4.2024 தேதி முதல் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டு (காலை 8.00மணி முதல் மதியம் 3.00 மணி)வரை அதை சுற்றியுள்ள வனத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு பொது மக்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.