பொறியியல் படிப்பிற்கான. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். தமிழகத்தில் மே மாதம் 12ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற பொறியியல் படிப்பை பயில விரும்பும் மாணவர்கள் (ஜுன்9)தேதி பொறியல் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களின் இரண்டாம் எண் மற்றும் தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.
ஜூலை 22 முதல் ஜூலை 28 வரையில் (விளையாட்டு உள்ளிட்ட மற்ற சிறப்பு இட ஒதுக்கீடு) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு முதற்கட்டமாக கலந்தாய்வு துவங்கப்படும். மேலும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட்9தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு ,ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை மூன்றாவது கட்ட கலந்தாய்வு 3 பிரிவுகளாக நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.