பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெற்றிநடை போடுகிறது!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெற்றிநடை போடுகிறது!

பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவானது. பொன்னியின் செல்வன் பாகம்1 கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் பாகம் 2  ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகுந்த எதிர்ப்பார்புகளுடன் வெளியானது. அருண்மொழிவர்மன் இறந்துவிட்டானோ என்ற  செய்தியோடு  பாகம் -1 நிறைவடைந்த நிலையில், அருண்மொழி வர்மன் உயிரோடுதான் இருக்கிறான் என பாகம் -2 தொடங்குகிறது.  சோழ குலத்தை அழிக்கச் சபதமேற்கும் நந்தினி யார், அவளின் சபதம் ,சுந்தர சோழன் குடும்பம், பாண்டிய ஆபத்துதவிகள் அழிக்கப்பட்டார்களா போன்ற கேள்விகளுக்கு விடைகள் சொல்கிறது  இரண்டாம் பாகம்.

முதல் பாகத்தைவிட ஜெயம் ரவியின் பாத்திரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏ ஆர் .ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் பலம்சேர்த்திருக்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல காட்சிகளைக் கவிதையாக்கியிருக்கிறது. நந்தினி – ஆதித்த கரிகாலனுக்கு இடையிலான காதல் காட்சிகள் படத்தில் மகுடமாக மாறியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்தின் பங்கு சிறப்பாக வெளிப்படுகிறது. மொத்தத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரேட்டிங்கில் 4 நட்சத்திரப் புள்ளிகள் பெற்று மக்கள் மத்தியில் வெற்றிநடை போடுகிறது.

 

Related post

சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது!

சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது!

 சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சலார் 2 திரைப்படத்தைப் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சலார் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் 2023…
புதுப்பேட்டை இரண்டாம் பாகம் விரைவில்!

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் விரைவில்!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் 2006 இல் வெளிவந்தது. சோனியா அகர்வால் ,சினேகா போன்றவர்கள் நடிப்புடன் யுவன் சங்கர் ராஜா இசையிலும் புதுப்பேட்டை…