பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட பல இடங்களில் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி அதிகரித்துள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள சுத்தமான மழை நீரால் ஏடிஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கொசு வகைகள் உற்பத்தியாகின்றன.எனவே தேங்கியுள்ள மழை நீரால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்களின் நலனுக்காக பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறையானது டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை =மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் உள்ள இடங்களை கண்டறிந்து தகவல்களை தெரிவிக்கவும், அதற்கான மருத்துவ கையிருப்புகளை வைத்திருக்கவும் சுகாதார உள் அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பொது சுகாதார துறையுடன் சேர்ந்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.