கன்னியாகுமரி ,தென்காசி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக நாளையும் ரெட் அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேலாக கனமழை மழை பொழிவு அதிகமாக காணப்படும் என்பதால் அசபாவிதம் நடைபெறாமலிருக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் கன்னியாகுமரி, கேரளா போன்ற சுற்றுவட்டார பகுதிகளில பெய்து வரும் கனமழையால் அணைகளும் நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களின் செல்போன்களுக்குக் குறுந்தகவல் எச்சரிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பேரிடர் மீட்பு படையினரும் பொது மக்களைப் பாதுகாக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.