பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு! பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி ,சேலை வழங்கு திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசாணை இன்று வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1983 ஆண்டிலிருந்து பொங்கல் திருநாளில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி,சேலை வழங்கபட்டு வருகிறது. எனவே இந்த வருடம் (2024 ஜனவரி 14) பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 1,68,00,000 சேலைகள், 1,63,00,000 வேட்டிகள் என்ற எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது.
இதற்காக ரூ200 கோடி நிதி ஒதுக்கீட்டினைத் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சேலை வேட்டிகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இத்திட்டமானது நியாயவிலை கடைகளில் பயனாளிகளின் கை விரல் ரேகை கொண்டு கட்டாயம் பதிவு செய்யப்பட்டு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.