பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஜூலை 7 ஆம் ஆம் தேதி ஒத்திவைப்பு!

பேனா நினைவுச் சின்னம் வழக்கு  ஜூலை 7 ஆம் ஆம் தேதி  ஒத்திவைப்பு!

பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஜூலை 7 ஆம் தேதி  ஒத்திவைப்பு. சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 134 அடி உயரத்தில் பேனா சின்னத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதற்கு எதிராக மீனவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

கடலின் நடுவே பேனா சின்னத்தை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் இந்த வழக்கு குறித்த  கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே ஜூலை 7 ஆம் தேதி பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related post

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் காரணமாக வலுவான புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு பெங்கால் என பெயரிட்டப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாடு, இலங்கை உள்பட கடலோரப் பகுதிகளிலும்,…
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர் திருவாரூர் புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை…
கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு. ஒரிசா ரயில் விபத்து காரணமாக  நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (ஜூன் 3 )  கலைஞர் பிறந்த…