மத்திய கல்வி அமைச்சகத்தால் நேற்றைய தினம் ’பரிக்ஷா பே சர்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமாள மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், குழந்தைகளைச் சந்தேகப்படக் கூடாது !என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் வெளிப்படையாக உரையாடல்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாக பழகி விருப்பங்களைப் புரிந்து அவர்களின் திறமைகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.