அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில பெற்றோர்களை இழந்து பயிலும் மாணவர்களுக்காக தமிழக அரசுரூபாய் 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய், தந்தை விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டிருந்தாலோ அந்த மாணவர்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூபாய் 5 கோடி தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தஆண்டிலிருந்து (2024 )புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்காக நிதி உதவி தொகை ரூபாய் 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது . இதனை அரசு பள்ளி கல்வித்துறை செயலர் ஜெ குமரகுருபரன் அரசாணையில் வெளியிட்டுள்ளார்.