பெரம்பலூர் மாவட்டத்தில் பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொழிற்சாலையை 2022 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் முன்னேற்றத்திற்காக காலணிகள் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் பினிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ஒப்பந்தம் செய்து காலணிகள் உற்பத்தியைத் தொடங்குகிறது..இப்பகுதியை சுற்றியுள்ள கரூர், நாமக்கல், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து 4,000பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்தத்தொழிற்சாலையில் 90 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிலிப்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் ஷேர்மேன் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். தற்போது காலணிகளை உற்பத்தி செய்ய தயார் நிலையில் உள்ள பெரம்பலூர் பினிக்ஸ் கோத்தாரி நிறுவனம் நவம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வரால் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.