பெண்களுக்காக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நாரி சக்தி திட்டம் அறிமுகம் !

பெண்களுக்காக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நாரி சக்தி திட்டம் அறிமுகம் !

‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி நாரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.. பெண்களுக்காக வங்கியில் நாரி சக்தி சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.. இத்திட்டம் சுயமாக சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களிடையே தன்னம்பிக்கை மற்றும் அதிகளவிலான நிதி சுதந்திரத்தை திரட்டி அவர்களை முன்னேற்றுவதே நோக்கமாகக் கொண்டுள்ளது. யூனியன்பேங்க் ஆப் இந்தியா நாரி சத்தி திட்டத்தில் வங்கியில் ரூ1கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு, ஆரோக்கிய பொருட்களின் மீதான தள்ளுபடி, தங்க நகை சலுகை, இலவச கிரெடிட் கார்டுகள் போன்ற வசதிகளை வழங்குகிறது.மேலும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா நாரிசக்தி சேமிப்பு கணக்கை அனைத்து 5132 உள்நாட்டு கிளைகளிலும் டிஜிட்டல் தளங்களின் மூலமாக திறக்கலாம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post