தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக் கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதன்படி சென்னையில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இந்த இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆட்டோக்களால் ஐடி பணியில் புரியும் பெண்கள் ,இரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ளும் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் பயணிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
