பூமித்தாயைப் பராமரிப்பது நமது கடமை -பிரதமர் மோடி. பூமித்தாயைப் பராமரிப்பது நமது கடமை எனப் பிரதமர் மோடி ஜி-20 மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தற்போது ஜி-20 மாநாடு பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நகரங்களில் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.இந்த நிலையில் நேற்று சென்னை மாமல்லபுரத்தின் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்றார். இதில் உரையாற்றிய தொடங்கிய பிரதமர் மோடி தமிழில் வணக்கம் ! என்றும் கலாச்சாரம் நிறைந்த சென்னையை வரவேற்கிறேன் என்று தொடங்கி உரையாற்றினார்.
பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழலால் தெற்கில் நாடுகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றன. எனவே பூமித்தாயைப் பாதுகாப்பது பராமரிப்பது நமது கடமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக் மாசுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தினார். இந்தியா புதிய ஆற்றல் படைக்கும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் செயல்படுகிறது என்றும் மேலும் இந்தியா சிறந்து விளங்குவதற்கான முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் தெரிவித்தார்.