தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் 2.8 லட்சம் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாதம் அட்டைகள் வழங்குவதற்கான விநியோக பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் புதிதாக ரேஷன் அட்டை பெறுபவர்களில் மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதி உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம் என வெளியாகியுள்ளது. அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் பயனாளர்கள் இணைக்கப்படுவார் எனத் தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.