பிரபல பின்னணி பாடகி பி .சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் தமிழக முதல்வர் வழங்கினார்!

பிரபல பின்னணி பாடகி  பி .சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் தமிழக முதல்வர் வழங்கினார்!

சென்னை கலைவாணர் அரங்கில் (21 11.2023)இன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார். அடுத்ததாக இந்தப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிய போது” பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கு அதிகமான பாடல்களைப் பாடி பத்மபூஷன், தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி சுசிலாவை புகழாரம் செய்தார்.

அதன் பிறகு ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திற்காக தமிழ்நாடு அரசு மானியமாக ரூ3 கோடியாகஉயர்த்தி உள்ளதாகவும், ஆராய்ச்சி மையத்தின் நூலகத்துக்கு ரூபாய் 1கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related post

இசைத்துறையில் சாதித்த பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்.

இசைத்துறையில் சாதித்த பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்.

இசைத்துறையில் சாதித்த பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்:பிரபல பாடகர் மனோவிற்கு  அமெரிக்காவில்  ரிச்மாண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டதினை வழங்கி உள்ளது. இசை புயலான பாடகர் மனோ தனக்கென…